ஒருவரை வெளிப்புற தோற்றம் மட்டும் அழகாக்காது… நடிகை திரிப்தி டிம்ரி டாக்!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வரும் திரிப்தி டிம்ரி, சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னம்பிக்கை குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளார். பல ஆண்டுகளாக இந்தி சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் அவர், தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான ‘அனிமல்’ திரைப்படம். அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. அந்த திரைப்படத்தின் வெற்றி, அவரை இந்தி திரையுலகில் மேலும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்றது.

‘அனிமல்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர், திரிப்தி டிம்ரிக்கு தொடர்ந்து புதிய பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “ஒரு மனிதருக்கு உண்மையான அழகை வழங்குவது தன்னம்பிக்கையும் நேர்மையும் தான். ஒருவரை வெளிப்புற தோற்றம் மட்டும் ஒருவரை அழகாக்காது, உள்ளார்ந்த அமைதியும் மன உறுதியும் தான் நிலையான அழகை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading