ஒற்றுமை மற்றும் உலக அமைதி குறித்து பேசியது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதுகுறித்து என கவலையில்லை- நடிகை நோரா பதேஹி!

பாலிவுட்டில் ‘டான்சிங் குவீன்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நோரா பதேஹி, உலக அமைதி தொடர்பாக வெளியிட்ட கருத்துகளை விமர்சித்தவர்களுக்கு தன்னுடைய பதிலை வெளிப்படையாக அளித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவி வரும் பதற்ற சூழ்நிலையை முன்னிட்டு, உலக அமைதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கருத்துடன் அவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பகிர்ந்திருந்தார். ஆனால் அந்த வீடியோவுக்குப் பிறகு சிலர் அவரை விமர்சித்து டிரோல் செய்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நோரா பதேஹி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “ஒற்றுமை மற்றும் உலக அமைதி குறித்து நான் பேசியது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினால், அது என்னுடைய பிரச்சினை அல்ல. உங்களுக்குள்ளே ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்பதற்கான அடையாளமாகும். 

நான் எந்த ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கும் ஆதரவாகப் பேசவில்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் போர்களாலும், மோதல்களாலும், குழப்பங்களாலும் பாதிக்கப்படும் பொதுமக்களுக்காகவே என் குரலை உயர்த்தினேன். அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அமைதிக்காக பேசுவதை நான் நிறுத்தப் போவதில்லை” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading