நடிகைகளை தவறாக சித்தரித்து புகைப்படங்கள் பதிவிடுவது கண்டிக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாது – நடிகை ருக்மிணி வசந்த்!

‘காந்தாரா’ திரைப்படத்தில் நடித்த நடிகைகள் ருக்மணி வசந்த் மற்றும் சப்தமி கௌடா ஆகியோரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் அவர்கள் திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினையை குறித்து தங்களது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த பதிவில், “திரைப்படத் துறையில் பணியாற்றும் பெண்களாகிய நாங்கள், மீண்டும் ஒருமுறை எங்களுக்கு தொடர்ந்து நேரும் ஒரு பிரச்சினையை எடுத்துரைக்க இணைந்துள்ளோம். பொதுநிகழ்வுகளில் நடிகைகள் கலந்து கொள்ளும் போது, அவர்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தவறான கோணங்களில் பதிவு செய்து பகிரப்படுகின்றன. மேலும், எங்களது உடல் பகுதிகளை தேவையற்ற வகையில் நெருக்கமாக காட்டும் வகையில் ஜூம் செய்து வெளியிடுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து, “சிலர் மேற்கொள்ளும் இத்தகைய செயல்கள் மிகவும் அவமரியாதையானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாங்கள் இங்கு கலைக்காகவும், சினிமாவிற்காகவும் செயல்படுகிறோம். வேண்டுமென்றே பரப்பப்படும் இத்தகைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் கடுமையாக கண்டிக்கிறோம். அவை தனிநபர் கண்ணியத்தை மீறும் செயல்களாகும். இதுபோன்ற நிகழ்வுகளை நாம் பொறுத்துக்கொள்ள முடியாது. தொழில்முறை சூழலில் அடிப்படை மரியாதையும் கண்ணியமும் கடைபிடிக்கப்பட வேண்டும். இதற்கான எல்லை தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையை சந்தித்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading