அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் மே 28ம் தேதி வெளியான படம் ‘பிளாஸ்ட்’. இப்படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது படத்தை நன்றாகவே பிக்அப் செய்ய வைத்தது.முதல் நாளில் மிகவும் டல்லாக இருந்த வசூல், நேற்றைய நான்காவது நாளில் முதல் நாளை விட சிறப்பாக அமைந்தது. முதல் வார இறுதியின் முடிவில் இப்படம் சுமார் 26 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add a Comment
