நானியிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் … -கயாடு லோகர்!

கயாடு லோகருக்கு சமீபத்திய வெளியீடுகள் ஒரே நாளில் இரண்டு படங்களாக அமைந்தன. “ஐ ஆம் கேம்” மற்றும் “இம்மார்ட்டல்” ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்த நிலையில், இரு படங்களும் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து கயாடு லோகரின் நடிப்பு மட்டுமின்றி, அவரது திரைத் தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வரும் கயாடு, தமிழில் மாரி செல்வராஜ் மற்றும் சூர்யா நடிக்கும் படங்களில் இணைந்துள்ளார். இதனுடன் தெலுங்கில் நானி கதாநாயகனாக நடித்து வரும் “தி பாரடைஸ்” திரைப்படத்திலும் அவர் நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் நானியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்தபோது, “நேச்சுரல் ஸ்டார்” என்ற பட்டம் அவருக்கு மிகவும் பொருத்தமானது என்று கயாடு தெரிவித்துள்ளார்.

கேமரா முன்பு நானி எந்தவித செயற்கைத்தன்மையும் இல்லாமல் நடிப்பதை நேரில் கவனித்தபோதுதான், அந்தப் பெயர் அவருக்கு எப்படி பொருந்துகிறது என்பதை புரிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். எளிமையான அணுகுமுறையுடன் இருக்கும் நானியுடன் பணியாற்றுவதும் மிகவும் சுலபமாக இருப்பதாக தெரிவித்த கயாடு, அவருடைய நடிப்பு அணுகுமுறை மற்றும் படப்பிடிப்பில் செயல்படும் விதம் ஆகியவற்றை நெருக்கமாக கவனித்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading