ரஜினியின் ஆக்சன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் – கேரள முதல்வர் பினராயி விஜயன் டாக்!

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை, மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார். அரசியல் மற்றும் திரையுலகை இணைக்கும் வகையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு நேர்காணல் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் டீசர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசரில், மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம், “முன்னர் நீங்கள் அளித்த பேட்டிகளில் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தீர்கள்” என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த பினராயி விஜயன், அது உண்மைதான் என உறுதிப்படுத்தி, குறிப்பாக ரஜினிகாந்தின் ஆக்ஷன் திரைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த பகுதி ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading