நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தில் நடிகர் பாசில் ஜோசஃப் ரஜினிகாந்தின் மகனாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் தனித்த இடத்தைப் பெற்றவர் பாசில் ஜோசஃப். ‘மின்னல் முரளி’ திரைப்படத்தை இயக்கிய அவர், நடிகராகவும் பல வெற்றிப் படங்களில் நடித்துத் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
‘ஜெய ஜெய ஜெய ஹே’, ‘ஃபலிமி’, ‘குருவாயூர் அம்பலநடையில்’ போன்ற திரைப்படங்கள் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரிய வரவேற்பைப் பெற்றன. தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த கதாபாத்திரம் குறுகியதாக இருந்ததால் எதிர்பார்த்த அளவில் கவனம் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 173’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகனாக பாசில் ஜோசஃப் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
