செப்டம்பர் 24ல் ‘தி பாரடைஸ்’ – என்ன ஸ்பெஷல்?

2023ல் வெளியான “தசரா” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் “தி பாரடைஸ்”. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான தோற்றத்திலும் கதாபாத்திரத்திலும் நானி நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

கதைக்களம் 1980களில் நடைபெறுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள், தங்களுக்கு எதிராக நடைபெறும் அமைப்புசார்ந்த அடக்குமுறையை எதிர்த்து உரிமைக்காக போராடுவதை மையமாக வைத்து கதை நகர்கிறது. “தசரா”வில் நானியின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ, அதேபோன்று “தி பாரடைஸ்” கதாபாத்திரமும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டீசரும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், குறிப்பாக “யெஷனாகுலா” பாடல் சமூக வலைதளங்களில் அதிகமாக கவனம் பெற்றது. இந்தப் பாடலில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனம் ஆடியிருந்தது கூடுதல் பேசுபொருளானது. தொடர்ந்து வெளியாகும் அப்டேட்கள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து வந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, “தி பாரடைஸ்” செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 23ம் தேதி இரவு சிறப்பு காட்சி நடைபெறும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading