ஒரு நல்ல முழுமையான நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்க ஆசை – நடிகை ஆண்ட்ரியா டாக்!

நடிகை ஆண்ட்ரியா நடிப்பைத் தாண்டி பாடகியாகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்துவருவதோடு மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பல்வேறு கலைத் திறமைகளை ஒருங்கே கொண்ட இவர், தனது இசை நிகழ்ச்சிகளின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், எந்த வகையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் போன்ற பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நான் நடித்துவிட்டேன்.

ஆனால் முழுமையான நகைச்சுவை திரைப்படத்தில் இதுவரை நடித்ததில்லை. நான் நடித்த படங்களிலும் பெரிய அளவில் நகைச்சுவை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, ஒரு நல்ல நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. அது விரைவில் நடக்குமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading