சர்வதேச திரைப்பட விழாவில் ‘நமஸ்கார்’ என்று சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை ஆலியா பட்!

பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் விருப்பமான நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் ஆலியா பட். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற பாப்டா விருது விழாவில் அவர் கலந்து கொண்டார். அந்த விழாவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. தனது உரையை அவர் ‘நமஸ்கார்’ என்று தொடங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

லண்டன் ராயல் பெஸ்டிவல் ஹாலில் நடைபெற்ற 79வது பாப்டா திரைப்பட விருது விழாவில், உலகளாவிய புகழ்பெற்ற தொகுப்பாளர்கள் பட்டியலில் ஆலியா பட் இணைந்திருந்தார். அந்த பட்டியலில் சிலியன் மர்பி மற்றும் கேட் ஹட்சன் போன்ற பிரபலங்களும் இடம்பெற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, ‘நமஸ்கார்’ என்று தொடங்கிய அவர் பின்னர், “இப்போதே சப்டைட்டிலை தேட ஆரம்பிக்காதீர்கள்” என்று நகைச்சுவையாக ஆங்கிலத்தில் கூறி அரங்கில் இருந்தவர்களை சிரிக்க வைத்தார். அவரது இந்த சுவாரஸ்யமான மற்றும் தன்னம்பிக்கையான பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது ஆலியா பட்டின் இந்த தருணம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading