நடிகை பிரியங்கா மோகன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இதுவரை பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், இப்போது முதல்முறையாக முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்திய கதையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ என்ற படத்தில் பிரியங்கா மோகன் மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் மையமாகவே அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கொரியாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் வருகிற மார்ச் 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
