இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் ‘அரசன்’ என்ற திரைப்படத்தை உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் சிலம்பரசனுடன் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தின் கதை வட சென்னை திரைப்படம் நடந்த அதே காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் தோன்ற உள்ளார் என்பதும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே கோவில்பட்டியில் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் பின்னர் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
