ரஜினிகாந்த் – கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்காக கைகோர்க்கும் நெல்சன் – அனிருத்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது திரைப்படத்தில் நடிக்கிறார், இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குவார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து  ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டு முன்னணி நடிகர்கள் இணையும் செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிப்பதால் இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தின் புரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார். இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading