இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அஜித் குமார் இணையுள்ள புதிய திரைப்படம் ‘ஏகே 64’. இந்த திரைப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கதைக்களம், நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பக் குழு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அஜித் குமார் தற்போது பங்கேற்றுள்ள கார் பந்தய போட்டிகள் நிறைவடைந்ததும், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முன்பே தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அனில் சுங்கரா தனது AK Entertainments நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனில் சுங்கரா முன்னதாக மகேஷ் பாபு நடித்த பல திரைப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ‘ஏகே 64’ திரைப்படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
