நடிகை முதல் ஓவிய கலைஞர் வரை… அசத்தும் நடிகை ஷாலினியின் தங்கையான ஷாம்லி!

நடிகை ஷாலினியின் தங்கையான ஷாம்லி, சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்தவர். நான்கு வயதிலேயே இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘மல்லூட்டி’ என்ற மலையாள திரைப்படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொள்ளும் குழந்தையாக நடித்தார். அந்த திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிமிக்க நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதுடன், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றுத் தந்தது.

இதனைத் தொடர்ந்து ‘துர்கா’ திரைப்படத்திலும் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த ஷாம்லி, மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி நடித்த திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2009ஆம் ஆண்டு ‘ஓய்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து கதாநாயகியாக முதல் முறையாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2010 முதல் 2015 வரை சிங்கப்பூரில் கல்வி பயில்வதற்காக சென்ற ஷாம்லி, தனது படிப்பை முழுமையாக்கிய பிறகு, தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘வீர சிவாஜி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பினார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், தனது நடிப்பு கனவுகளை ஒதுக்கி வைத்து, ஓவியக் கலைத்துறையை தனது விருப்பமான வாழ்க்கைப் பாதையாகத் தேர்வு செய்தார்.

சிங்கப்பூரில் உள்ள லசாலீ கலைக் கல்லூரியில் காட்சி தொடர்பியல் மற்றும் திரைப்படக் கல்வியில் பட்டம் பெற்ற ஷாம்லி, அதன் பின்னர் பிரான்சில் உள்ள பாரிஸ் கலைக் கல்லூரியிலும் சிறப்பு பயிற்சியை முடித்தார். சிங்கப்பூரில் கல்வி கற்கும் காலத்தில், சீன மை நுட்பங்களை பயன்படுத்தும் ஓவியக் கலையிலும், கண்ணாடி மேற்பரப்பில் ஓவியங்களை வரையும் கலைத்திறனிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றார்.

தன்னைத்தானே தொடர்ந்து மேம்படுத்திக் கொண்ட ஷாம்லி, தற்போது ஒரு தொழில்முறை கண்காட்சி ஓவியக் கலைஞராக வளர்ச்சி பெற்றுள்ளார். 2023ஆம் ஆண்டு சென்னையில் உள்ள போகஸ் ஆர்ட் கேலரியில் ‘ஷி’ என்ற தனிக் கண்காட்சியை நடத்தினார். உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக கலை துபாய் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், பெங்களூருவில் உள்ள சித்ரகலா பரிஷத் அரங்கில் நடைபெற்ற கலைக் கண்காட்சியிலும் தனது ஓவியப் படைப்புகளை வெளிப்படுத்தினார்.குழந்தை நட்சத்திரமாக தேசிய விருதை வென்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக உயர்ந்த ஷாம்லி, காலப்போக்கில் தனது திறமைகளை புதிய திசையில் வளர்த்துக்கொண்டு, இன்று ஒரு சிறந்த ஓவியக் கலைஞராக தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading