நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி?

நடிகர் கார்த்தி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதே சமயம் தெலுங்கு மொழியிலும் அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் வணிக சந்தையும் காணப்படுகிறது. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. அதேபோல் ‘மார்ஷல்’ திரைப்படமும் தயாராகி வருகிறது 

இதனைத் தொடர்ந்து கார்த்தி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ‘மேட்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் சங்கர் இந்த புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

தற்போது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை மீனாட்சி சவுத்ரியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading