‘அமரன்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷின் 55வது திரைப்படம் அடுத்ததாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், பாலிவுட்டைச் சேர்ந்த ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி நடித்துள்ளார். நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகின. நாளை இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட உள்ளதாகவும், அந்தப் படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திருப்பதியில் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
