ஹிந்தி சினிமாவில் ஒருகட்டத்தில் அவமானங்களை சந்தித்தேன்… நடிகை ரெஜினா கசாண்ட்ரா Open Talk!

இந்தி திரைப்படத் துறையில் பலர் என்னை வார்த்தைகளாலும் செயல்களாலும் மரியாதையற்ற முறையில் நடத்தினர்” என்று நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்த இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த வெளிப்படையான கருத்து திரையுலகில் நிலவும் அணுகுமுறைகள் குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

அவர் மேலும் பேசுகையில், நான் தென்னிந்திய நடிகையாக இருந்தாலும், இந்தி மொழியை மற்ற நடிகைகளைக் காட்டிலும் நன்றாக பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். எனக்கு வழங்கப்படும் கதாபாத்திரங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து முழுமையான ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். இருப்பினும் இப்படிப்பட்ட அனுபவங்களை சந்திப்பது மனவேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ரெஜினாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாஙி வருகிறது. திரையுலகில் உள்ள பாகுபாடு மற்றும் அணுகுமுறை குறித்த கேள்விகள் மீண்டும் முன்வந்துள்ள நிலையில், அவரது இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading