பத்து கோடி செலவு செய்திருந்தாலும் எனக்கு இப்படியொரு விளம்பரம் கிடைத்திருக்காது – நடிகை மிருணாள் நகைச்சுவை பேச்சு!

இந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாகத் திகழும் மிருணாள் தாகூர், தனது இயல்பான மற்றும் உணர்ச்சி மிகுந்த நடிப்பின் மூலம் தனக்கென வலுவான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமீப காலமாக அவர் நடிகர் தனுஷை காதலித்து வருகிறார் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் பல்வேறு கிசுகிசுக்கள் பரவி வந்தன. சமூக வலைதளங்களிலும் இந்த தகவல்கள் பரவலாக பேசப்பட்டன. எனினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிருணாள் தாகூர் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தினார்.

அண்மையில் நடைபெற்ற ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “உங்களைப் பற்றிய காதல் தொடர்பான கிசுகிசுக்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்ற கேள்விக்கு நகைச்சுவையுடனும் அமைதியான அணுகுமுறையுடனும் பதிலளித்தார். இந்த கேள்வி எழுப்பப்பட்டவுடன், அரங்கில் இருந்தவர்கள் பெரும் ஆர்வத்துடன் அவரது பதிலை எதிர்பார்த்தனர்.

அப்போது அவர் கூறியதாவது: “என்னைப் பற்றிய கிசுகிசுக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பத்து கோடி ரூபாய் செலவு செய்திருந்தாலும் இப்படிப்பட்ட விளம்பரம் கிடைத்திருக்காது. ஆனால் இல்லாத விஷயங்களை இருப்பது போல பேசி என்னை மிகப்பெரிய அளவில் பேச வைத்துவிட்டார்கள்,” என்று சிரித்துக்கொண்டு தெரிவித்துள்ளார். அவரது இந்த சுறுசுறுப்பான பதில் ரசிகர்களிடையே கவர்ந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading