10 ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்சு வாரியர் மற்றும் குஞ்சாக்கோ போபன் இணைந்து நடிக்கும் திரைப்படம்!

மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியது 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ திரைப்படத்தின் மூலம் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைத்துறைக்கு திரும்பிய அவர், அந்த படத்தின் மூலம் மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றார். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்திருந்தார். இந்த ஜோடியின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு வெளியான ‘வேட்ட’ திரைப்படத்திலும் மஞ்சு வாரியர் மற்றும் குஞ்சாக்கோ போபன் மீண்டும் இணைந்து நடித்தனர்.

இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ‘நேரே செவ்வா’ (நேரா செவ்வாய் கிரகத்துக்கு) என்ற புதிய திரைப்படத்தில் இந்த ஜோடி மீண்டும் ஒன்றிணைந்து நடிக்கின்றனர். அறிவியல் கற்பனை நகைச்சுவை வகையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

டீசரை பார்க்கும்போது இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் ரசிகர்களை கவரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரஞ்சித் வர்மா இயக்குகிறார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் இயக்குநரான நிதிஷ் சகாதேவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading