இது என் இசையுலகில் ஒரு முக்கியமான மைல்கல்… புதிய இசை லேபிளைத் தொடங்கிய அனிருத்!

தனது தனித்துவமான மற்றும் உற்சாகமான இசை மூலம் தென்னிந்திய திரையுலகிலும் பாலிவுட்டிலும் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் அனிரூத். அண்மையில் அவர் ‘கூலி’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது இசையில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், சிம்புவின் ‘அரசன்’, லோகேஷ் கனகராஜ்  நடிக்கும் ‘டிசி’, ‘ஜெயிலர் 2’, மற்றும் ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ போன்ற பல முக்கிய திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். தொடர்ந்து பல பெரிய திட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் புதிய முயற்சியாக ‘Albuquerque Records’ என்ற இசை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அனிருத், ‘Albuquerque Records’ மூலம் இசையை மையமாகக் கொண்ட வணிகத் துறைக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைகிறேன். இது என் படைப்புலகில் ஒரு முக்கியமான கட்டமாக அமையும். திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பே நான் சுயாதீன பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தேன். அந்த அனுபவத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொள்கிறேன் என்றார்.

மேலும், இந்த நிறுவனம் மூலம் திரைப்பட இசை மட்டுமின்றி தனிப்பட்ட இசைப்பாடல்களிலும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி அவர்களை ஊக்குவிக்க முடியும் என நம்புகிறேன். வளமான குரல்கள், நம் பண்பாட்டு இசை மரபுகள் ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். என்னுடைய அனைத்து பாடல்களும், குறிப்பிட்ட பின்னணி இசைத் தொகுப்புகளும் இந்த நிறுவனத்தின் கீழ் வெளியிடப்பட உள்ளன. இதன் மூலம் இசை உலகில் புதிய பாதையை அமைக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading