நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் சேயோன்.  ‘அமரன்’ திரைப்படத்திற்குப் பின்னர் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒருமுறை இணைந்திருப்பது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் உயர்த்தியுள்ளது. இந்த கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது என்பதாலேயே திரைப்படம் வெளியாகும் முன்பே பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. “சேயோன்” திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். வெளியிடப்பட்ட முதல் தோற்றப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், “சேயோன்” திரைப்படத்தின் புதிய விளம்பரக் காணொளியும் வெளியாகியுள்ளது. அந்தக் காணொளியில், இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு கமல் ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும், நேர்மையும், விடாமுயற்சியும் உங்களை இன்னும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading