ஜிவி பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முதல் பாடலான “ஆடினே இருப்பேன்” என்ற பாடல் வெளியாகி வைரல்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஹேப்பி ராஜ்”. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். இவர் முன்பு பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘லவ் டுடே’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இந்த திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அப்பாஸ் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில், “ஹேப்பி ராஜ்” திரைப்படத்தின் முதல் பாடலான “ஆடினே இருப்பேன்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் வெளியானது முதல் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக, இந்தப் படத்தில் அஜித்குமார் தொடர்பான ரேசிங் காட்சிகளும், ‘பென்குயின்’ என பேசப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளையும் நினைவூட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading