‘வாரணாசி’ படத்தைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் நடிக்கிறாரா மகேஷ் பாபு?

இயக்குநர் ராஜமவுலி தற்போது இயக்கி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள படப்பிடிப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ‘வாரணாசி’ திரைப்படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தற்போது பிரபாஸ் நடிப்பில் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து மகேஷ்பாபுவுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. 

அந்த திரைப்படத்திற்கு ‘டெவில்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘வாரணாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்ததும் ‘டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading