கடந்த 2022ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் ‘மகான்’ ஆகும். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான பிறகு இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, விமர்சகர்களாலும் கவனிக்கப்பட்டது.
தற்போது கார்த்திக் சுப்பராஜ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசினார். அப்போது ‘மகான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஐடியா கிடைத்து விட்டதாகவும், அதை முழுமையாக எழுத அதிக கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2027 அல்லது 2028ஆம் ஆண்டுகளில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
