‘இருமுடி’ படத்தில் ‘காவேரி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியா பவானி ஷங்கர்!

தெலுங்கு திரையுலகில் ‘நின்னு கோரி’, ‘மஜிலி’, ‘குஷி’ போன்ற காதல் உணர்வுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சிவா நிர்வாணா. தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘இருமுடி’. இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு இணையாக கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துவருகிறார்.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர் ‘காவேரி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அறிமுகப் போஸ்டர் மூலம், ரவி தேஜா மற்றும் பிரியா பவானி சங்கர் கணவன்–மனைவி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இணைந்துள்ளார். ஆக்சன் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த இந்த படம், ஐயப்பன் சுவாமியை மையமாகக் கொண்டு கதை நகரும் வகையில் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading