‘SK26’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா பிரபல டோலிவுட் நடிகை?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த திரைப்படமாக ‘SK26’ படத்தில் ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில்  நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான புரோமோ காணொளி தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு மதுரை பகுதியில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக தெலுங்கு திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான பாக்யஸ்ரீ போஸ் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. 

மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்ற உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 05.02 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading