ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் எப்போது? வெளியான முக்கிய அப்டேட்!

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் இந்த தொடர்ச்சிப் படத்திலும் இடம்பெற்று வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகை வித்யா பாலன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கவர்த்தி மற்றும் சந்தானம் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஆரம்பத்தில் இந்த ஆண்டின் ஆகஸ்ட் 12ஆம் தேதியாக நிர்ணயிக்க திட்டமிட்டிருந்தனர். காரணம், ‘ஜெயிலர்’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியை செண்டிமென்டாக கருதி, ‘ஜெயிலர் 2’ படத்தையும் ஆகஸ்ட் மாதத்திலேயே வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் வேகமாக முன்னேறி விரைவில் நிறைவடையவுள்ளன. இதனால் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த படத்தை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading