‘வாரணாசி’ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? உலாவும் ஆச்சரியமான தகவல்!

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், இசையமைப்பாளர் எம்.எம்.கீராவாணி இசையில், நடிகர்கள் மகேஷ் பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘வாரணாசி’. தெலுங்கில் உருவாகி வரும் இந்தப் படத்தை உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். ஆரம்ப கட்டத்திலிருந்தே இந்த திரைப்படம் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

படத்தின் தலைப்பு அறிவிப்பு மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு போன்ற முக்கிய தகவல்களை கூட உலகளாவிய மீடியாக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல பத்திரிகை, இந்த திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 1300 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதுடன், இந்திய திரையுலகில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இந்தப் படம் குறித்து பெரிய பேச்சு எழுந்துள்ளது.

படத்தின் தயாரிப்பு செலவே இத்தனை அதிகமாக இருப்பதால், அதற்கான வியாபாரமும் வசூலும் ஹாலிவுட் திரைப்படங்களின் அளவிற்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே இந்தப் படத்திற்கான விநியோக மற்றும் வெளியீட்டு உரிமைகள் தொடர்பான வியாபார பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading