கவனத்தை ஈர்க்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்கி நடித்துள்ள ‘சரஸ்வதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த ‘தாரை தப்பட்டை’, ‘சர்கார்’, ‘விக்ரம் வேதா’, ‘சத்யா’, ‘சண்டக்கோழி 2’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், அவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்திலும் அவர் நடித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் திரைப்படங்களில் அதிகமாக தோன்றாமல் அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனது சகோதரி பூஜாவுடன் இணைந்து ‘தோசா டைரீஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் ‘சரஸ்வதி’ திரைப்படத்தின் மூலம் வரலட்சுமி இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்துள்ளது. நடிகையும் இயக்குநருமான இரு பொறுப்புகளையும் ஏற்றுள்ள வரலட்சுமியின் ‘சரஸ்வதி’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான காணொளி வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது, இப்படத்தின் முதல் தோற்றப் பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading