Advertisement

நடிகை ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. 

இந்த திரைப்படம் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இதில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று திடீரென வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின் மூலம், திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘தாய் கிழவி’ திரைப்படம் தற்போது பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply