கருப்பு படத்தின் ரிலீஸ்க்கு பின்னரே ‘SURIYA46’ வெளியாகும்… தயாரிப்பாளர் நாக வம்சி உறுதி!

‘கருப்பு’ திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே நடைபெற வேண்டியுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்துவரும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்ற தலைப்பை சூட்ட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் நாக வம்சி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு நடிகர் நடித்த இரண்டு திரைப்படங்களுக்கும் குறைந்தது மூன்று மாத இடைவெளி இருக்க வேண்டும் என்பது தனது எண்ணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதனால் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த 46வது திரைப்படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading