இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்!

மலையாள திரையுலகில் மறைந்த நடிகர் சுகுமாரன் அவர்களின் மனைவியும் நடிகையுமான மல்லிகா சுகுமாரன், தனது மகன்கள் பிரித்விராஜ் மற்றும் இந்திரஜித் ஆகியோர் திரையுலகில் முன்னேறி வருவதைக் குறித்து பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

இளைய மகன் பிரித்விராஜ் மலையாளத்தைக் கடந்தும் தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் நடித்து வருவதோடு, இயக்குநராகவும் பிஸியாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம், மூத்த மகன் இந்திரஜித் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் சர்வம் மற்றும் என் மன வானில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில் மல்லிகா சுகுமாரன், “எனது மூத்த மகன் இந்திரஜித் விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அதற்கான கதை தயாராக உள்ளது. தற்போது ஹிந்தியில் அனுராக் காஷ்யப் உடன் ஒரு படம், மேலும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் இன்னொரு ஹிந்தி படம் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்துவருகிறார். தமிழில் ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இத்திட்டங்களை முடித்தவுடன் இயக்கத்திலும் இறங்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading