Manjummel Boys இயக்கத்தின் மூலம் மிகப்பெரிய கவனம் பெற்ற இயக்குநர் Chidambaram, தனது முதல் படமான Jan.E.Man மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அபாரமான வெற்றியைப் பெற்று, அவரை முன்னணி இயக்குநர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்த சூழலில், ‘பாலன்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு Jithu Madhavan கதை எழுதியுள்ளார்,=இவர் ‘Aavesham’ திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டவர். ‘பாலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், பாலிவுட் இயக்குநர் Ram Gopal Varma, இயக்குநர் சிதம்பரத்தை சந்தித்த அனுபவத்தை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், “மிகப்பெரிய வெற்றிப்படமான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் சிதம்பரத்துடன் நான். அவர் இயக்கியுள்ள வரவிருக்கும் ‘பாலன்’ திரைப்படத்தின் சில பகுதிகளை நான் பார்த்தேன். அதை வெறுமனே அற்புதம் என்று சொல்லிவிட முடியாது; அது அதையும் தாண்டி அதி அற்புதமான அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் அந்தப் படத்தைப் பற்றிய தனது கருத்தை வெளியிட்ட அவர், நான் பார்த்த வரையில் ‘பாலன்’ திரைப்படம் இந்திய திரையுலகையே உலுக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்” என தெரிவித்தார்.
‘பாலன்’ திரைப்படம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரிய எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருந்த நிலையில், ராம் கோபால் வர்மா வெளியிட்ட இந்த பாராட்டுச் செய்தி அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், ‘பாலன்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் சிதம்பரம் ஒரு இந்தி திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த இந்தி படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
