2025ஆம் ஆண்டின் வெற்றிப் படமான டூரிஸ்ட் பேமிலி மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். கடந்த வாரம் வெளியான வித் லவ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நேற்று நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பேசிய அபிஷன் ஜீவிந்த், “அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே இப்போது சொல்லிவிடுகிறேன். தயாரிப்பாளர்கள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் பசிலியான் ஆகியோருடன் மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணைய இருக்கிறேன், என்று தெரிவித்தார்.
அவர் அந்தப் படத்தை இயக்கவிருக்கிறாரா, நடிக்கவிருக்கிறாரா அல்லது இரண்டையும் சேர்த்து செய்யவிருக்கிறாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது தெரியவரும்.
‘வித் லவ்’ படத்தை இணைந்து தயாரித்த மகேஷ் பசிலியான், குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது ஹேப்பி என்டிங் படத்தையும் தயாரித்து வருகிறார். அதேபோல்‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராக தனது முதல் வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
