டோவினோ தாமஸ் – கயாடு லோஹர் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

டிஜோ ஜோஸ் ஆண்டனி – டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் பள்ளிச்சட்டம்பி. இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், பிரசாந்த் அலெக்ஸாண்டர், வினோத் கெடமங்களம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், “காட்டுச்செம்பகம்” என்ற முதல் பாடலை பிப்ரவரி 12ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading