அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில், விக்ரம் பிரபு, அறிமுக நாயகன் எல்கே அக்ஷய்குமார், அறிமுக நாயகி அனிஷ்மா அனில்குமார் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2025ம் வருடம் டிசம்பர் 25ம் தேதி வெளியான படம் ‘சிறை’.விக்ரம் பிரபுவின் 25வது படமாக வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் படம், 30 கோடிக்கு மேல் வசூலைக் கடந்து இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றுடன் இப்படம் வெளிவந்து 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
Add a Comment
