ஜென் Z சில வகையான படங்களை மட்டுமே ரசிப்பார்கள் என்று சொல்வது கட்டுக்கதை… இயக்குனர் ராஜூ முருகன் டாக்!

இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்சி’, ‘மாடர்ன் லவ் சென்னை’ (லாலகுண்டா பொம்மைகள்), ‘ஜப்பான்’ ஆகிய திரைப்படங்கள் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த வரிசையில், அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மை லார்ட்’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சசிகுமார் மற்றும் சைத்ரா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகியதிலிருந்து இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மை லார்ட்’ திரைப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது. 

சமீபத்திய பேட்டியில் இயக்குநர் ராஜூமுருகன், ஜென் Z குறித்து பேசினார். “இப்போது ஜென் Z சில வகையான படங்களை மட்டுமே ரசிப்பார்கள் என்று கூறப்படுவது ஒரு கட்டுக்கதை. சமீபத்தில் வெளியான ‘சிறை’ நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் இயக்குநரும் ஜென் Z தலைமுறையைச் சேர்ந்தவரே. எந்த வகை திரைப்படமும் எந்த காலத்திலும் ஓடலாம். ஜென் Z தலைமுறைக்காக மட்டுமே படம் எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading