விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் அரண்மனையில் வருகிற 26-ம் தேதியில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து வெளியிட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், இதுகுறித்து விஜய் தேவரகொண்டா அல்லது ராஷ்மிகா மந்தனா தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Add a Comment
