தனது முதல் பட சம்பளத்தில் பள்ளி கூடம் கட்டும் நடிகை மோனலிசா!

ஒரு இந்தி மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வரும் கும்பமேளா பிரபலம் நடிகை மோனலிசா அளித்துள்ள பேட்டியில், ‘கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என் சொந்த ஊரில் பெண்களுக்கான பள்ளியை கட்ட முடிவு செய்திருக்கிறேன். என் முதல் படத்தின் சம்பளத்தை வைத்து அந்த பள்ளியை கட்டப் போகிறேன். கல்வி மூலம் தான் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். அதனால் எனக்கு கிடைக்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்யப்போகிறேன்’ என்றார். மோனலிசாவின் முடிவு வைரலாகி வரும் நிலையில் திடீரென பணம் கிடைத்ததும் ஆடம்பரத்துக்கு ஆசைப்படாமல் பள்ளிக்கூடம் கட்ட நினைப்பது பெருமைக்குரிய விஷயம் என்று பலரும் வாழ்த்தியுள்ளனர்.

Add a Comment

Leave a Reply