நடிகர் டிஎஸ்கே வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்கும் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’

விஜய் டிவி மூலம் பிரபலமான டிஎஸ்கே, கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய வெப் தொடர் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’. இந்த வெப் தொடரை மூவி ஸ்க்ரோல் நிறுவனம் சார்பில் சோமு தேவ் தயாரித்துள்ளார். இயக்குநராக ஷங்கர் நாகதேவன் பணியாற்றியுள்ளார். ரஞ்சனா கதாநாயகியாக நடித்திருக்க, தீபா சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.

இந்த வெப் தொடரை குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் பேசுகையில், “கர்ப்பம் தரித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல், மன வலிகளை ஆண்களால் உணர முடியாது. ஒருவேளை ஒரு ஆண் கர்ப்பமானால் அது எப்படி இருக்கும் என்ற சிந்தனையில்தான் இந்தக் கதையை உருவாக்கினோம். கடவுள் ஒரு ஆணை படைக்கும் போது அவனது தலையெழுத்தை சற்றே தவறாக எழுதி விட்டான் என்ற கோணத்தில் இந்த கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை முழுக்க முழுக்க காமெடியாக மாற்றாமல், ஒரு அளவு சீரியஸான அணுகுமுறையுடன் உருவாக்கியுள்ளோம்.

கர்ப்பம் தொடர்புடைய சில காட்சிகள் மட்டுமே சீரியஸாக இருக்கும்; அதைத்தவிர, இது முழுவதும் நகைச்சுவை கலந்த கதையாகவே அமைந்துள்ளது. கர்ப்பம் என்பது தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல, அதனைச் சுற்றி ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை மையமாக வைத்து படம் எடுக்கலாம் என்ற முயற்சிதான் இது. பெண்களை கேலி செய்வதோ, கர்ப்பத்தை வைத்து தவறான நகைச்சுவை செய்வதோ எங்களின் நோக்கம் அல்ல. மாறாக, அந்த விஷயங்களை மரியாதையுடனும், சீரியஸாகவும் பேச முயன்றுள்ளோம். முதலில் இதை இரண்டு மணி நேர திரைப்படமாக உருவாக்க நினைத்தோம். ஆனால் சில காரணங்களால், ஐந்து எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸாக மாற்றி உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த வெப் தொடர் வருகிற 14ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘மூவி ஸ்க்ரோல்’ தளத்தில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading