2046ல் நடைப்பெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கற்பனை கதைக்களத்தில் உருவான ரஜிஷா விஜயனின் ‘மஸ்திஸ்கா மரணம்’

தமிழில் ‘கர்ணன்’, ‘ஜெய் பீம்’ மற்றும் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘பைசன் காளமாடன்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனித்த அடையாளம் பெற்றவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். இவரது நடிப்பில் அடுத்ததாக மலையாளத்தில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம் ‘மஸ்திஸ்கா மரணம்’, வரும் பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம், கற்பனை கதைக்களத்தில் 2046ஆம் ஆண்டில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரஜிஷா விஜயன், சினிமா நடிகை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடல் தோற்றத்தை முழுமையாக மாற்ற வேண்டியிருந்ததால், தொடர்ந்து ஆறு மாதங்களாக இடைவிடாமல் ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக ‘ஜூன்’ என்ற திரைப்படத்திற்காகவும் இதேபோல் தீவிரமான ஜிம் பயிற்சிகளை மேற்கொண்டு நடித்த அனுபவம் தனக்கு இருப்பதாக நினைவுகூர்ந்த ரஜிஷா விஜயன், அந்த அனுபவமே இந்த படத்திற்காகவும் தன்னை ஊக்குவித்ததாக தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading