‘வித் லவ்’ படத்திற்கு கிடைக்கும் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை எண்ணி நெகிழ்ச்சியுடன் கண்கலங்கிய நடிகை அன்ஸ்வரா ராஜன்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில், அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள திரைப்படம் ‘வித் லவ்’. இந்த படத்தின் மூலம் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். அபிஷன் ஜீவிந்த், இதற்கு முன்பு தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘வித் லவ்’ திரைப்படத்தில், காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘வித் லவ்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் வெளியானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்த்தனர். அப்போது ரசிகர்களிடம் உரையாடிய நடிகை அனஸ்வரா ராஜன், மேடையில் பேசும் போது கண்கலங்கினார். திரையரங்கில் அவர் பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்ன சொல்வதென்று தெரியவில்லை என்னால் சொல்ல முடியவில்லை. இந்த படத்தின் முதல் நாள், முதல் காட்சியை பார்க்க வந்த உங்களுக்கு எல்லாம் நன்றி. இந்த படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று கூறும் போதே அவரது கண் கலங்கினார். இதனைத் தொடர்ந்து, திரையரங்கில் இருந்த ரசிகர்கள் அவரது பெயரை கூறி பெரும் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading