‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான புது அப்டேட் !

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. பொதுவாக, ஒரு படத்தின் டீசர் வெளியான சில வாரங்களுக்குள் டிரைலர், பாடல்கள் உள்ளிட்ட அப்டேட்கள் வெளியாகி, அதன் பின்னர் படம் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். ஆனால், ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், படத்தின் வெளியீடு குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது.

இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒரு வாரத்திற்கு முன்பு எக்ஸ் (X) சமூக வலைதளத்தில், “‘கருப்பு’ படத்தின் பைனல் கட்டை தற்போது பார்த்தேன். இந்த காத்திருப்பு தகுந்ததே,” என்று பதிவு செய்திருந்தார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தற்போது, படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதத்திற்கு முக்கிய காரணமாக, ஓடிடி மற்றும் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமைகள் தொடர்பான விற்பனை பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இழுபறி தான் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், படத்தில் இடம்பெறும் விஎப்எக்ஸ் காட்சிகளின் பணிகளும் திட்டமிட்ட காலத்தை விட தாமதமாக முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து, ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

!

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading