திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் குறைப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு!

திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும் கால அவகாசம் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ளார். இதுவரை 48 நாட்களாக இருந்த தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் கால எல்லை, இனி 18 நாட்களாக குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில், தியேட்டர் வெளியீட்டிற்காக தணிக்கைச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் திரைப்படங்களுக்கு, 18 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறும்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும் கால அவகாசம் 3 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2021-22 ஆம் ஆண்டில் 2,031 திரைப்படங்களுக்கும், 2022-23 ஆம் ஆண்டில் 2,777 திரைப்படங்களுக்கும், 2023-24 ஆம் ஆண்டில் 2,837 திரைப்படங்களுக்கும், 2024-25 ஆம் ஆண்டில் 2,687 திரைப்படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 2025 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 2,248 திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2025-26 காலகட்டத்தில் மட்டும் 55 திரைப்படங்கள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட 10 திரைப்படங்கள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.

தவெக தலைவர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவது தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள சூழலில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, விரைவில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading