அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் “தாய் கிழவி”. இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் குரலில் பாடப்பட்டுள்ள “தாய் கிழவி வரா” என்ற முதல் பாடல், நாளை (பிப்ரவரி 5) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் முனிஷ்காந்த், பாலசரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் மற்றும் ரெயிச்சல் ரிபேக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “தாய் கிழவி” திரைப்படம், வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
