திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்!

திருமணம் மற்றும் தாய்மை குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. சினிமா மற்றும் இசைப் பணிகளில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களையும் அவ்வப்போது வெளிப்படையாக பேசி வருகிறார்.

திருமணத்தைப் பொறுத்தவரை, ஒரு கட்டத்தில் தான் திருமணத்திற்கு மிகவும் நெருக்கமாக சென்றதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். அந்த அனுபவம் தனக்கு எந்தவித பயத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். தனக்கு முக்கியமானது ஒரு துணையுடன் இணைந்து வாழ்வதும், இருவரும் தினமும் ஒருவரை ஒருவர் நேசிப்பதும்தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், அந்த உறவுக்கு திருமணம் என்ற சட்டப்பூர்வ ஆவணம் அவசியம் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். திருமணத்தின் மீது பெரிய நம்பிக்கை Target அவர், தாய்மை அடைவதில் அதிக ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளார்.எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது அல்லது உயிரியல் ரீதியாக தாயாவது என இரண்டு வழிகளிலும் தான் தயாராக இருப்பதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். திருமணத்தைவிட தாய்மை குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading