ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் டிரெய்லர் !

நிவின் பாலி, சூரி இணைந்து நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது..

‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான நிவின் பாலியை வைத்து இயக்குனர் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

‘ஏழு கடல் ஏழு மலை’ ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றுள்ளது. தற்போது ரிலீஸுக்கு சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading