‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘இரண்டு வானம்’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இதுவரை படக்குழுவால் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ‘இரண்டு வானம்’ அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வெற்றிப் படங்களை கொடுத்துள்ள ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணியின் மூன்றாவது படமாக இது உருவாகியிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
