ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘FLAG’ திரைப்படத்தின் டிரெயிலர்!

ஒவ்வொரு இந்தியரும் கட்டாயமாக திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படமாக ‘Flag’ உருவாகியுள்ளது. தமிழில் எஸ்.பி. பொன் சங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை, ஐ அண்ட் ஐ மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் மிக்கி மஹிஜா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ‘இட்லி கடை’ திரைப்படத்தில் சின்ன வயது தனுஷாக நடித்த தீஹான், அமீர் மாலிக், கிரீத்துவாரகேஷ், அபினவ் கோ சாமி, பபுஷா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லரை பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ‘Flag’ திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். ஒவ்வொரு இந்தியரும் அவசியம் திரையில் கண்டு மகிழ வேண்டிய படம் இதுவே என அவர் தெரிவித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading